விஜய் ஹசாரே போட்டி: சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங்

திங்கட்கிழமை, 1 மார்ச் 2021      விளையாட்டு
Suryakumar-Yadav 2021 03 01

Source: provided

சிம்லா : இந்திய டி-20 அணிக்குத் தேர்வான சூர்யகுமார் யாதவ், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 2020 ஐ.பி.எல். போட்டியில் நன்கு விளையாடி 480 ரன்கள் எடுத்தார். மும்பை அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடருக்கு அவர் தேர்வாகியுள்ளார்.

விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ். ஹிமாசலப் பிரதேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி முதல் 3 விக்கெட்டுகளை 8 ரன்களுக்கு இழந்தபோதும் விரைவாக ரன்கள் குவித்தார் சூர்யகுமார் யாதவ். 75 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த வருட விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் இதுவரை ஒரு சதமும் இரு அரை சதங்களும் எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். நல்ல ஃபார்மில் உள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரிலும் இவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 விஜய் ஹசாரே போட்டியில் சூர்யகுமார் யாதவ் எடுத்த ரன் விவரம் வருமாறு., 50(33), 29(27), 133(58), 29(26), 91(75).

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து