முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. 

திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு அருகில் கிட்டத்தட்ட 150 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை 6.45 மணியளவில் கடைகளுக்கு அருகே செல்லும் மின்வையரில் மின் கசிவு ஏற்பட்ட நிலையில், அங்குள்ள 7 கடைகளுக்கு தீ மளமளவெனப் பரவியது.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடைபெற்ற நேரத்தில் கடைகளில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!