முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆரின் புதிய விதிகள்

புதன்கிழமை, 5 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

டெல்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாசிட்டிவ் என வந்தவர்கள், மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டாம் என்று ஐ.சி.எம்.ஆர். அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய ஆர்.டி.பி.சி.ஆர் மிக முக்கிய சோதனை முறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது. இதன் தேவைகள், ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, இந்தியாவில் கொரோனா தொற்றை உறுதிப்படுத்த பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. பொதுவாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளுக்கான முடிவு, சுமார் 3 நாட்களுக்குப் பிறகு தான் கிடைக்கிறது.

இந்தியாவில் மொத்தம் 2,506 மூலக்கூறு பரிசோதனைக் கூடங்கள் இருக்கின்றன. இந்த பரிசோதனைக் கூடங்கள் மூன்று வேலை நேரமும் செயல்பட்டால் கூட, அவற்றால் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். அங்கு பணிபுரியும் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, பரிசோதனை கூடங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க, ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதைக் குறைக்க ஐ.சி.எம்.ஆர் அமைப்பு, சில ஆலோசனைகளை முன் வைத்திருக்கிறது.

புதிய விதிகள் என்ன?

அதன்படி ஏற்கெனவே ஆர்.டி.பி.சி.ஆர் அல்லது ரேபிட் ஆன்டிஜென் சோதனை மூலம் கொரோனாவால் பாதிப்பு உறுதியானவர்கள், மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்யத் தேவை இல்லை.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதகள் படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறுபவர்கள், மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யத் தேவை இல்லை.

ஆரோக்கியமானவர்கள், மாநிலங்களுக்கு இடையில் பயணிக்க தங்களை ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் பரிசோதித்துக் கொள்கிறார்கள். இது முழுமையாக நீக்கப்படலாம் என ஆலோசனைகளை முன் வைத்திருக்கிறது.

தற்போது இந்தியாவில் கொரோனா பாசிடிவிட்டி விகிதம் 20 சதமாக இருக்கிறது. பரிசோதனை – பின் தொடர்ந்தல் – தடமறிதல் – சுயமாக தனிமைப்படுத்திக் கொள்வது தான், கொரோனா நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கான வழி என ஐ.சி.எம்.ஆர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து