முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலுக்கு பின் வன்முறை: மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 25 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தலுக்குப்பின் நடந்த வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிந்தபின் நடந்த வன்முறைச் சம்பவங்களில், 16 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் தாக்குதலுக்கு அஞ்சி வெளியேறினர்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் ஆணையம் ஆகியவற்றையும் மனுதாரரக சேர்க்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தேர்தலுக்கு பின் நடந்த வன்முறையால் பல ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்ததுள்ளனர். போலீசார் துணையுடன் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரும், குண்டர்களும் சேர்ந்து மக்களைத் தாக்குகின்றனர். இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவம் போன்றவற்றை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இதே போல் வழக்கறிஞர் அருண் முகர்ஜி உள்ளிட்ட 5 சமூக ஆர்வலர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வினீத் சரண், பி.ஆர்.காவே ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மேற்கு வங்க அரசு உரிய பதில் மனுவை வரும் ஜூன் 7-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 2-வது வாரத்தில் மனு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும். மனுதாரர் கோரிக்கையான தேசியமனித உரிமைகள் ஆணையம், மகளிர் குழந்தைகள் உரிமை ஆணையத்தையும் மனுதாரர்களாக சேர்க்க அனுமதியளிக்கிறோம் என உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து