வேளாண் சட்டங்களை எதிர்த்து பார்லி. வளாகத்தில் காங். தர்ணா

dhamu-05

Source: provided

புது டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 

அதை தொடர்ந்து பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாராளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. 

இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்   பாராளுமன்றத்தில் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலையின் முன்பாக காங்கிரஸ் எம்.பி-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை காப்பாற்றுவோம்,  நாட்டைக் காப்பாற்றுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி தர்ணாவில் காங்கிரஸ் எம்.பி-க்கள்   ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து