முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்து வரும் கொரோனா அலைகளை தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும்: சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: பணம் ஈட்டும் நோக்கில் செயல்படுவதை தனியார் மருத்துவமனைகள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தனியார் மருத்துவமனையில் தடுப்பூசிகள் இலவசமாக  செலுத்துவது குறித்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரித்தால் தான் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் தான் அடுத்த வரவுள்ள கொரோனா அலைகளை தவிர்க்க முடியும்.வரும் அலைகளுக்கு அரசு மருத்துவமனைகள் தயாராக இருப்பதை போல தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சில தனியார் மருத்துவமனைகள் இந்த நிலையிலும் பணம் ஈட்டும் நோக்கில் உள்ளனர், அதை மாற்றி கொள்ள வேண்டும். மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தனியார் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்கும்.தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசமாக கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து