குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யார்? சைபர் கிரைம் விசாரணை

Khushbu 2021 07 20 0

Source: provided

சென்னை: தனது கணக்கு முடக்கப்பட்டது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பா.ஜ.க. நிர்வாகியான நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த 20ஆம் தேதி முடக்கப்பட்டது. டுவிட்டர் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள், சில பதிவுகளை நீக்கியுள்ளனர். 

இது பற்றி டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சென்னை சைபர் கிரைம் போலீசில் குஷ்பு புகார் செய்தார். 

அதன் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர். குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து டுவிட்டர் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து