முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது போட்டியில் இந்தியா தோல்வி: டி-20 தொடரை வென்றது இலங்கை

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா 20 ஓவரில் 81 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.

சுற்றுப்பயணம்.... 

தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்தியா வென்ற நிலையில் அதை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. 

தலா ஒரு போட்டியில்...

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் இலங்கை தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் இந்த தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி...

தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், சேதன் சக்காரியா, வருண் சக்ரவர்த்தி. 

இலங்கை அணி...

அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பனுகா (விக்கெட் கீப்பர்), சமரவிக்ரமா, நிசங்கா, தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், சமிகா கருணாரத்னே, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீரா. 

தடுமாற்றம்...

இந்தியா தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 14 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 36 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.

81 ரன்கள் மட்டும்...

அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தசுன் ஷனகா 2 விக்கெட் எடுத்தார்.

82 ரன்கள் இலக்கு...

இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 12 ரன்னும், பானுகா 18 ரன்னும்,  சமரவிக்ரமா 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது. தனஞ்செய டி சில்வா 23 ரன்னும், ஹசரங்கா 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தொடரை வென்றது...

இதன்மூலம் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து