முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      இந்தியா
Karke 2024-05-07

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். 

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 26-ம் தேதி 14 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. எஞ்சியுள்ள 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.  

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது மனைவி ராதாபாய் கார்கேவுடன் கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே  கூறியதாவது:-

பெங்களூரு தொகுதி எங்களுக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் எங்களுக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அனைத்து தொழிலதிபர்களும், ஏழை மக்களும் இணைந்து இம்முறை காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்வார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். 

கடந்த முறை செய்த தவறுக்கு மக்கள் வருந்துகின்றனர். இம்முறை காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். நான் அமைச்சரான போதும், எதிர்க்கட்சித் தலைவராகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும்  ஆன போதும் பசவநகரை நான் என்றும் மறந்ததில்லை. 

இங்குள்ள மக்கள் எனக்கு அன்பையும் பாசத்தையும் கொடுத்துள்ளனர். அவர்கள் உண்மையில் எனது தலைமையை வளர்த்துள்ளனர். என்னுடன் நின்ற ஏழை மக்களுக்கு நன்றி உள்ளவனாக நான் அவர்களுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து