ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Stalin 2020 07-18 - Copy

Source: provided

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

அசாம் மாநிலத்தின் சிறிய கிராமத்தில் இருந்து, அனைத்துத் தடைகளையும் எதிர்த்துப் போராடி, தன் தாய்க்கு அளித்த உறுதியை நிறைவேற்றும் வண்ணம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை லவ்லினா போர்கோஹெய்ன் பெற்றுத் தந்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்கிறேன். லவ்லினா வென்ற வெண்கலப் பதக்கத்தை விடவும் அவர் வாழ்க்கையே இந்தியர்கள் அனைவருக்கும் சிறந்த ஊக்கமளிப்பதாக உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து