மேற்கு வங்கத்தில் வெள்ளம்: மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Mamta-Modi 2021 08 04

Source: provided

புது டெல்லி: மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சில பகுதிகளில் பலத்த மழையால் அணைகள் நிறைந்து அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார். 

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில், அணைகளிலிருந்து தண்ணீர் வடிந்ததால் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு, இயன்ற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து