7,000 சிப்பிகளை கொண்டு விநாயகரை வடிவமைத்த மணற்சிற்ப கலைஞர்

vinayakar-2-2021-09-10

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 7,000 சிப்பியைக் கொண்டு விநாயகர் உருவத்தை வடிவமைத்துள்ளார் பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். 

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக்கின் மணற்சிற்பங்கள் உலக அளவில் பிரபலமானவை. முக்கிய தினங்கள், முக்கிய சாதனைகள் குறித்து தன்னுடைய கைவண்ணத்தில் ஒடிசா கடற்கரை மணலில் இவர் உருவாக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் பார்ப்போரை வியக்க வைக்கும். 

 

இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 7,000 சிப்பியைக் கொண்டு புரி கடற்கரையில் மிகப்பெரிய விநாயகர் உருவத்தை வடிவமைத்து உலக அமைதி என்ற கருத்துருவையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதையடுத்து இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து