எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரதியாரின் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்ததற்கு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் சில தினங்களுக்கு முன் அறிவித்தபோது, அதனை நான் வரவேற்றதோடு, இந்திய விடுதலைக்கு முன், மொழிப் பற்றினையும், நாட்டுப் பற்றினையும், ஒருமைப்பாட்டினையும், காவிரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால், கவிதை நயத்தால் உணர்த்தி, உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பி, விடுதலை உணர்வினை ஊட்டிய மகாகவி பாரதியாரோடு ஒப்பிட்டு தமிழகத்தில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பெரியார் என்று கூறியிருந்தேன்.
இந்த நிலையில், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது அனைவரும் வரவேற்கக்கூடிய ஒன்று. தமிழ் மொழியின் சிறப்பினை உலகுக்கு உணர்த்திய கவிஞர் பாரதியார். மொழிப்பற்று உடையவனே நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர் பாரதியார். விடுதலைப் பாடல்களால் தமிழகத்தை வீறுபெறச் செய்தவர் பாரதியார். பாரதி ஒரு பன்மொழிப் புலவர்.
ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, இந்தி என, பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த பாரதி, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் எனப் பாடினார் என்றால், அந்த அளவுக்கு உயர்ந்த மொழி தமிழ் மொழி என்பதுதான் அதன் உள்ளார்ந்த பொருள்.
தமிழ் மொழியின் சிறப்பையும், உயர்வையும் கூறி இளைஞர்களின் உள்ளங்களில் இன்றளவிலும் சிம்மாசனமிட்டு இருப்பவர் பாரதியார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சிலகாலம் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பாரதி, பல செய்தி இதழ்களையும் நடத்திய பெருமைக்குரியவர். செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எனத் தாய் நாட்டின் உயர்வை வியந்து பாடிய பாரதி, நாட்டுப் பற்றினைப் போற்றும் வகையில், 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு' என்று பாரத நாட்டையும் போற்றி மகிழ்ந்தார்.
முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள் எனப் பாடி, இந்தியர்களின் ஒற்றுமை உணர்வைப் படம் பிடித்துக் காட்டியவர் பாரதியார். ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம் என்ற பாரதியாரின் வாக்குக்கிணங்க, பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண்ணுரிமையை நிலைநாட்டும் வகையிலும், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவித் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், மகளிர் இரு சக்கர வாகனத் திட்டம் என பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியதோடு, சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தவர் ஜெயலலிதா.
ஏழை என்றும், அடிமை என்றும், எவனும் இல்லை சாதியில் என்று பாடிய பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள் மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு, பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகத்தை மாணவ, மாணவியருக்கு வழங்குதல், பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப் பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்தல், பாரதி குறித்த நிகழ்வுகளை பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் நடத்துதல், திரையில் பாரதி என்ற நிகழ்வினை நடத்துதல், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரில் இருக்கை அமைத்தல், உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பதினான்கு அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்புகளை அ.தி.மு.க.வின் சார்பில் வரவேற்பதோடு, இந்த அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 10 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 12 hours ago |
ஆனியன்ப்ரை6 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 97.75 சதவீதம் பேர் தேர்ச்சி
14 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது.
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
பணிப்பெண் கடத்தல் வழக்கில் ஜாமின்: சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா
14 May 2024பெங்களூரு : பெண் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட மஜத எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவுக்கு திங்கட் கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் நே
-
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருத்துவத்துறை: உத்தரவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
14 May 2024புதுடெல்லி : நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மருத்துவத்துறை இருப்பது தொடர்பாக 1996ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர