முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      விளையாட்டு
KL-Rahul 2023-08-29

Source: provided

17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் கடந்த 8-ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை அபிஷேக் ஷர்மா (75 ரன்கள், 28 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), டிராவிஸ் ஹெட் (89 ரன்கள், 30 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா, மைதானத்திலேயே அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலிடம் ஆக்ரோஷமாக விவாதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் விரக்தி அடைந்த ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

________________________________________________________

வங்காளதேச அணி அறிவிப்பு 

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன. ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, இலங்கை, நெதர்லாந்து போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள வங்காளதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார்  உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜேக்கர் அலி அனிக், தன்வீர் இஸ்லாம், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப். ரிசர்வ் வீரர்கள்; அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத்.

________________________________________________________

நியூயார்க் புறப்பட்ட இலங்கை அணி

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி தொடர் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மோதுகின்றன. உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள பாகிஸ்தான், வங்காளதேசத்தை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன. 

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும், சரித் அசலங்கா துணை கேப்டனகாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டது. இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து