முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்டிங் ஃபார்ம் குறித்து விமர்சனம்: கோலிக்கு ஆதரவாக 'கபில் தேவ்' கருத்து

வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

 

மும்பை: விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் குறித்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இப்போதும் மிகவும் ஆற்றல்மிக்க அனுபவமிக்க கிரிக்கெட் வீரராக கோலி இருக்கிறார் என்றும் விரைவில் சதம், இரட்டை சதமல்ல... 300 ரன்கள் கூட அவர் குவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள்... 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம், சமீப காலமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருக்கவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலி, சதம் விளாச முடியாமல் திணறி வருகிறார். இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவது தான் கோலியின் பேட்டிங்கை பாதிக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

சற்றுத் தடுமாற்றம்...

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், 'விராட் கோலி, கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து ரன்கள் குவித்து வந்தார். அவர் நன்றாக விளையாடும் போதெல்லாம் இதைப் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால், இப்போது அவரது பேட்டிங்கில் சற்றுத் தடுமாற்றம் காணப்பட்டவுடன் கருத்து சொல்ல வந்துவிடுகிறார்கள்.

அனுபவ வீரராக... 

விராட் கோலி இப்போது மிகவும் ஆற்றல்மிக்க அனுபவமிக்க கிரிக்கெட் வீரராக இருக்கிறார். அவர் விரைவில் சதம், இரட்டை சதமல்ல... 300 ரன்கள் கூட குவிப்பார்' என்று தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து