முக்கிய செய்திகள்

பிரிட்டனில் 87 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

England-Corona 2021 10 23

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 71 லட்சத்தை நெருங்குகிறது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 87 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனா வைரசால் 180 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,39,326 ஆக உள்ளது. மேலும் 14.64 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து