முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் "யாத்ரி நிவாஸ்" என்ற பக்தர்கள் தங்கும் விடுதியை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு அர்ப்பணித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று காலை வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். முன்னதாக சாமி தரிசனம் செய்த அவர் கோவில் வளாகத்தில் ஓதுவார் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தார். பின்னர் சாமியை தோளில் சுமந்து சென்று தங்க ரதத்தை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தல மரக்கன்று நட்டார்.

பின்னர் கோவில் வளாகத்தில் செயல்பட்டுவரும் மருத்துவ முதலுதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஈசானிய மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள "யாத்ரி நிவாஸ்" என்ற பக்தர்கள் தங்கும் விடுதியை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் கிரிவலப் பதையில் உள்ள மின் இணைப்புகளை பூமிக்கடியில் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் திருக்கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தேரோடும் வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பது கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பாகவும் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து