முக்கிய செய்திகள்

தீபாவளிக்கு வரும் இட்டேனல்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
Ethanols 2021 10 31

Source: provided

Marvel Studios வழங்கும் மார்வல் சூப்பர்  ஹீரோ திரையுலகத்தின் 25 வது ஹாலிவுட் திரைப்படம் Eternals,  இதுவரை திரையில் கண்டிராத, புத்தம் புதிய சக்தி மிக்க 10 புதிய சூப்பர் ஹீரோக்கள் இந்த Eternals படம் மூலம் அறிமுகமாகிறார்கள். இந்த திரைப்படம் தீபாவளியை ஒட்டி நவம்பர் 5 ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. நட்சத்திர கூட்டத்திலிருந்து பூமிக்கு வந்த Eternals ஹீரோக்கள்  பூமிப்பந்தை மறைமுகமாக பாதுகாத்து வருகிறார்கள்.

ஆனால், மான்ஸ்டர்களான Deviants  புதிரான வகையில் மீண்டும்  பூமிக்கு படையெடுக்க, Eternals ஒன்றிணைந்து, பூமியையும் மனித இனத்தையும் காப்பாற்றுகிறார்கள்,  என்பது தான் படத்தின் கதை. இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமாயில் நஞ்சியானி, லியா மெக்ஹுக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பேரி கியோகன், டான் லீ, கிட் ஹரிங்டனுடன், சல்மா ஹெய்க் மற்றும் அகாடமி விருது வென்ற ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து