முக்கிய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு !

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Actor-Vijay 2021 11 15

Source: provided

சென்னை : சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் ஏற்கனவே பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து