முக்கிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று பவுர்ணமி கருடசேவை

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      ஆன்மிகம்
tirupati-2021-11-18

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருடசேவை (தங்க கருட வாகன வீதிஉலா) நடப்பது வழக்கம். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து