முக்கிய செய்திகள்

விரைவில் திரைக்கு வரும் இடியட்

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Ram-Bala 2021 11 22

Source: provided

சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு என்ற படத்தை இயக்கியவர் ராம் பாலா. இப்படம் 75 நாட்கள் வரை ஓடி பெரும் வெற்றி பெற்றது. அதே போல் தில்லுக்கு துட்டு 2 படமும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து தற்போது மிர்ச்சி சிவா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இடியட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆக்ஷ்ன், திரில்லர், காதல் மற்றும் நகைச் சுவை கலந்த கலவையாக உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இப்படம் மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பை பெரும் என்று படம் பார்த்த இயக்குனர்கள் பலர் தெரிவித்ததாக இயக்குனர் ராம் பாலா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து