முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசீல பிரியாணி விமர்சனம்

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

தந்தையை கொன்றவனை பழி தீர்க்க புறப்படும் மூன்று பிள்ளைகளின் கதைதான் இந்த கடைசீல பிரியாணி படம். தாயின் வற்புறுத்தலின் பேரில் அண்ணன், பெரியதம்பி, சின்னதம்பி ஆகிய 3 பேரும் கேரளாவுக்கு செல்கின்றனர். அங்கு காட்டுப்பகுதியில் தனி பங்களாவில் வசிக்கும் கொலையாளியை  கொன்று விட்டு தப்பிக்கின்றனர். தந்தை கொல்லப்பட்ட தகவல் அவரது மகனுக்கு தெரியவருகிறது, கொலையாளிகளை பிடிக்க செல்லும் வழியில் இரு அண்ணன்களும் உயிரிழக்க கதை திசை மாறுகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். பழிவாங்கும் கதை என்றாலும் மாறுபட்ட திரைக்கதையுடன் அமைத்திருக்கிறார் இயக்குனர்  நிஷாந்த் கலிதிண்டி. கதையை காட்சிகளாக விரிந்தாலும்  பின்னணியில் அவ்வப்போது கதை பற்றிய விவரங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது குரலால் விளக்கி வருகிறார். அத்துடன் ஒரே காட்சியில் விஜய் சேதுபதி தலைகாட்டிவிட்டு செல்கிறார். கேரள பகுதியில் நடக்கும் கதை என்பதால் நிறைய வசனங்கள் மலையாளத்தில் இடம் பெற்றுள்ளது.  வினோத் தணிகாசலத்தின்  பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது. மொத்ததில் சினிமா விரும்பிகள் பார்க்க வேண்டிய படம் இந்த 'கடைசீல பிரியாணி'.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து