முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி, சபரிமலையை தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கும் திருச்செந்தூர் கோவில்

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து திருப்பதி, சபரிமலையை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் திருச்செந்தூர் கோவிலும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

நெல்லை மற்றும்  திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய இடைவிடாத பலத்த கனமழை நேற்று முதல் பெய்தது. கனமழை காரணமாக திருச்செந்தூர் கோவிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் தவித்தனர். கோவிலின் உள் மற்றும் வெளி ப்ரகாரங்களில்  மழை நீர் வரத்து அதிகரித்து கொண்டேயிருப்பதால் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை நீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும். 

திருச்செந்தூரில் நேற்று காலை பெய்த பலத்த மழையினால் குடியிருப்புகள் மற்றும் முருகன் கோயிலைச் சுற்றி மழை நீர் சூழ்ந்தது. நகரே வெள்ளக்காடானதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் அவதியடைந்தனர். சுமார் 3 மணி நேரத்தில் 17 செ.மீ. மழை பதிவானதால் தெருவெங்கும் வெள்ளக்காடாய் இருந்தது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிரிப்பிரகாரம்,, சண்முக விலாசம் பகுதியில் இருந்து மழைநீர் திருக்கோயில் உள்ளேயே வழிந்து ஓடியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து