முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஒமைக்ரான்' வைரஸ் இந்தியாவிலும் பரவியது: கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

உலகை அச்சுறுத்தி வரும் 'ஒமைக்ரான்' வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே டெல்டா, பீட்டா, காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. இதற்கிடையில், தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. ‘ஒமைக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த ஒமைக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.  தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால்நேற்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து