முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ரஷியா இடையே நட்பு மேலும் வளர வேண்டும் : அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம்

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியா - ரஷியா இடையே நட்பு மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார. 

இந்தியா - ரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். டெல்லியிலுள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதின் சந்திப்பு நடைபெற்றது. 

இந்தியா - ரஷியா இடையேயான 21-வது உச்சி மாநாடு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரு நாடுகளின் 21-வது உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த மாநாட்டின் போது பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் பல்வேறு சவால்களை சந்தித்தபோது இந்தியா - ரஷியா இடையேயான நட்பு வளர்ந்து கொண்டு செல்கிறது. நமது சிறப்பு வாய்ந்த மற்றும் யுக்தி நிறைந்த கூட்டணி தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது.

கடந்த சில தசாப்தங்களில் உலகம் பல்வேறு அடிப்படை மாற்றங்களை கண்டுள்ளது. வேவ்வெறு புவிசார் அரசியல் கூட்டணிகள் உருவெடுத்து வருகின்றன. ஆனால், இந்தியா - ரஷியா இடையேயான நட்பு தொடர்ந்து நிலையாக உள்ளது. இந்தியா - ரஷியா இடையேயான உறவு தனித்துவமான மற்றும் நம்பக்கத்தன்மை கொண்ட நட்பாகும்’ என்றார்.

பின்னர், பேசிய ரஷிய அதிபர் புதின், இந்தியாவை நாங்கள் ஒரு பெரிய சக்தியாக கருதுகிறோம். இந்தியா நட்பு நாடு மற்றும் காலத்தால் பரிசோதிக்கப்பட்ட ரஷியாவின் நண்பன் இந்தியா. நமது இரு நாடுகளின் உறவு வளர்ச்சியடைந்து வருகிறது. இது மேலும் வளர்ச்சியடைய நான் விரும்புகிறேன். 

தற்போது, ரஷியாவில் இருந்து கூடுதல் முதலீடு வர உள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான முதலீடு 38 பில்லியனை தொட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ராணுவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாங்கள் பெரிதும் ஒத்துழைக்கிறோம். 

நாம் இணைந்து அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை இந்தியாவில் தயாரிக்கிறோம். பயங்கரவாதம் தொடர்புடைய அனைத்தையும் பற்றி இயற்கையாகவே நாங்கள் கவலைப்படுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பது போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சண்டையுமாகும். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து நாங்கள் கவலைகொள்கிறோம்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து