முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றை தடுக்க, குணப்படுத்த புதிய ஆயுஷ் மருந்துகளை பரிந்துரைக்கும் மத்திய அரசு

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      இந்தியா
ayush-tablets-2022-01-13

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் புதிய ஆயுஷ் மருந்துகளைப் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் ஆகிய பெருந்தொற்றிலிருந்து நம்மைப் பாதுக்காக உடலில் சிறந்த அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பது அவசியம். அதற்காக ஆயுஷ் அமைச்சகம் புதிய மருந்துகளை அறிவித்துள்ளது.

இது குறித்து ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் பிரமோத் குமார் பதக் அளித்த பேட்டியில், "கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நோய் வந்தால் அதிலிருந்து குணமடையவும் ஆயுஷ் அமைச்சகம் மருந்துகளைப் பரிந்துரை செய்து வருகிறது. அந்த வகையில் நோய் எதிர்ப்புச்சக்தி திறனை அதிகப்படுத்த ஆயுஷ் 64 மற்றும் கபசுர குடிநீர் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆயுஷ்64 மருந்து திறன்மிக்கது என்பதைக் கண்டறிய 7 விதமான கிளினிக்கல் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் நாள்தோறும் இரு வேளை சாப்பிடக்கூடிய 500எம்ஜி கொண்ட இரு மாத்திரைகள், 3 வேளை சாப்பிடக்கூடிய 500எம்ஜி கொண்ட 3 மாத்திரைகள் இருக்கின்றன. இந்த மாத்திரைகளை கொரோனா பாதிப்பு லேசான அறிகுறிகள் இருப்போருக்கும் பயன்படுத்தலாம்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த 3 விதமான மருந்துகளைப் பரிந்துரை செய்கிறோம். முதலில் ஆயுராக்ஸா கிட் இதில் தினசரி 6 கிராம் சாப்பிடக்கூடிய சவன்பிராஷ் லேகியம், தினசரி 75மில்லி குடிக்கக்கூடிய ஆயுஷ் காவத், இரு வேளை சாப்பிடக்கூடிய சம்ஸாமணி வாதி 500 எம்ஜி, தினசரி மூக்கில் சில சொட்டுகள் விடக்கூடிய அனு தைலம் ஆகியவை இருக்கும்.

 

இரண்டாவதாக குட்சி ஞானவதி 500எம்ஜி மாத்திரைகள் நாள்தோறும் இரு மாத்திரைகள், 3வதாக அஸ்வகந்தா மாத்திரைகள் நாள்தோறும் இரண்டு சாப்பிட வேண்டும். ஆயுஷ் மருந்துகல் கொரோனா வரமால் தடுக்க நோய் எதிர்ப்புச் சக்தியையும், வந்தாலும் அதிலிருந்து விரைவாகமீள மருந்துகளையும் பரிந்துரைக்கிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடலில் சிறந்த அளவு நோய் எதிர்ப்புச்சக்தி அவசியம்" என்று பிரமோத் குமார் பதக் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து