முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைகளை அழித்து விட்டோம்: ஐக்கிய அரபு அமீரகம்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய இரு ஏவுகணைகளை பதிலடி தாக்குதலில் அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், தலைநகர் அபுதாபியை நோக்கி நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய இரு ஏவுகணைகளை எங்கள் ராணுவம் தாக்கி அழித்தது. ஐக்கிய அரபு அமீரகம் எந்தவிதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. நாட்டை பாதுகாக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் கடந்த திங்கட்கிழமை டிரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த மூவரில் இருவர் இந்தியர்கள். ஒருவர் பாகிஸ்தானியர்.

இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமன் தலைநகர் சனாவில் சவுதி, ஐக்கிய அரபு படையினர் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 12-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஏமனின் சடா பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது சவுதிப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் வரை பலியாகினர். சவுதியின் இத்தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது. இதன் காரணமாக வளைகுடா பதற்றம் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து