முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      இந்தியா
Baby-Rani

Source: provided

பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார்.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறைக்கான அமைச்சர்  பேபி ராணி மவுரியா கலந்து கொண்டார். இதன்பின்னர் அவர் லக்னோ நோக்கி நேற்றிரவு புறப்பட்டார். அவருடைய கார் பிரோசாபாத் மாவட்டத்தில் இருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்றின் டயர் ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, அமைச்சர் யின் காரை நோக்கி வந்தது. அது காரின் மீது மோதியது. எனினும், உடனடியாக காரின் ஓட்டுநர் வேறு பக்கம் காரை திருப்பி பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்த்திருக்கிறார்.

இந்த விபத்தில் கார் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும், காயம் எதுவுமின்றி அமைச்சர்  பேபி ராணி உயிர் தப்பினார். இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். அமைச்சர் , லக்னோவுக்கு வேறு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் இருவழிகளில் செல்லாமல், ஒரு வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன. இந்த சூழலில் விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விபத்துகளை தவிர்க்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர்  பேபி ராணி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்ச்சியாக, அதிகாரிகளும் பாதுகாப்பு விதிகளை சீராய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து