முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்களை அறிவித்தது ஆணையம்

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்படிருப்பதாவது.,

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதரணத் தேர்தல்கள் நடத்துவதற்கு 26.01.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரால் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் ஏதும் இருந்தால், அதனை பெறுவதற்காக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் 'புகார் மையம்' அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் 24*7 இயங்கும்.

பொதுமக்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் சம்பந்தமான புகார்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து