முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

167 மீனவ சமூக மாணவர்களுக்கு ரூ.60 லட்சம் கல்வி உதவித்தொகை : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
Anita-Radhakrishnan 2022 05

Source: provided

சென்னை : 167 மீனவ சமூக மாணவர்களுக்கு ரூ.60 லட்சம் கல்வி உதவித்தொகையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

அமெட் பல்கலைக்கழகத்தில் மீனவர் சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் நாசே. ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

தலைமை உரையாற்றிய வேந்தர் டாக்டர் நாசே ராமச்சந்திரன், “கடல்சார் துறைகளில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நிலையை மாற்றி, மீனவர் சமுதாய மக்களின் பங்களிப்பை கடல்சார் துறைகளில் உயர்த்தவும், மாணவர்களுக்கு கல்வி நலனுக்காக உதவித்தொகை வழக்கப்படுவதாக” கூறினார்.

அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசும் போது, “மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த 167 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 60 லட்சம் வழங்கிய அமெட் பல்கலைக்கழக வேந்தருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை கட்டுமரத்தில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார், அவரது மகன் இப்பல்கலைக்கழகத்தில் படித்து கப்பலில் பொறியாளராகவோ அல்லது கேப்டனாகவோ பணியாற்ற போகிறார் என்பது மீனவ சமுதாயத்திற்கு பெருமையாகும்” என்றார். விழாவில் பதிவாளர் ஜெயபிர காஷ்வேல் வரவேற்றார். இணை பதிவாளர் சங்கீதா ஆல்பின் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து