Idhayam Matrimony

கைலாசாவில் தலைவிரித்தாடும் பஞ்சம் ? பரிதாப நிலையில் நித்தியானந்தா..!

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      உலகம்
Nithiyananda 2022 05 13

கைலாசாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் போதிய உணவு, மருந்துப்பொருட்கள் கிடைக்காமல் பரிதாப நிலையில் நித்தியானந்தா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.

இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன. “நான் இறந்துவிட்டதாக சிலர் புரளிகளை கிளப்பி வருகிறார்கள். நான் தற்போது சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. பேசும் திறன் இல்லை. சொற்பொழிவாற்ற சில காலம் ஆகும்.

27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பிரபஞ்ச சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். 18 வயது இளைஞனை போல இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நித்ய சிவபூஜை தொடர்ந்து நடைபெறுகிறது” என்று ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போது நித்தியானந்தாவின் சமீபத்திய புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் எலும்பும் தோலுமாக இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் பல கிளைகளை வைத்திருக்கும் நித்தியானந்தாவிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் என்ற நோக்கில் கைலாசா நாடு ஒன்றினை அறிவித்து வாழ்ந்து வருகின்றார். ஆனால் இவரது குற்றங்கள் வெளிநாடுகளிலும் தெரியவரவே அங்கிருந்து வரும் வருமானம் குறைந்ததோடு, இடையே கொரோனா தாக்கத்தினால் பல இடங்களில் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் கைலாசா பஞ்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.

முறையான இந்திய உணவு பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் கைலாசாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக சமீபத்தில் அங்கிருந்து தப்பித்துவந்த ஒரு சீடர் தெரிவித்திருந்தார். இதனை உண்மையென அறிவிக்கும் நிலையில், தற்போது நித்தியானந்தாவின் புகைப்படமும் வெளியாகி அதிர வைத்துள்ளது.  நித்யானந்தாவின்  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் சிகிச்சைக்காக இந்தியா வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், இவரை கலாய்த்து வந்த நெட்டிசன்கள் தற்போது நலம்பெற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து