முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் : ஐ.ஐ.டி.க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 16 மே 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புது டெல்லி : கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு கற்றல் குறைபாடு உள்ள நபர்கள் கால்லூரிகளில் பயில்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மும்பையை சேர்ந்த நமன் வர்மா என்பவர்  ‘டிஸ்கால்குலியா” என்ற கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இவர் மும்பை ஐ.ஐ.டியில் முதுநிலை டிசைன் பாடத்தில் சேர்வதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். ஆனால் இவரது உடல்நிலை காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். இதன்படி அவரை ஐஐடியில் சேர்த்துகொள்ள சட்டப்பிரிவு 226 பிரிவின் கீழ் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நமன் வெர்மா ஐ.ஐ.டி மும்பையில் டிசைன் பாடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். பின் கடந்த 2018-ஆம் ஆண்டு தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். இருப்பினும் அவருக்கு டிகிரி வழங்குவதற்கு நீதிமன்றத்தால் உத்தரவிடமுடியாது என மறுத்துவிட்டது. 

இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சட்டப்பிரிவு 142-ன் கீழ் நமன் வெர்மா டிகிரி வாங்குவதற்கு தகுதியான நபர் என தீர்ப்பளித்தது. இன்னும் 4 வாரத்தில் வருக்கு டிகிரி வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு கற்றல் குறைபாடு உள்ள நபர்கள் கால்லூரியில் பயில்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!