முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சல் பவுத்த ஆலயத்தில் அமித்ஷா சிறப்பு வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      இந்தியா
Amit-Shah 2022 05 14

Source: provided

இட்டாநகர் : அருணாசலப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள கோல்டன் பகோடா பவுத்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, அருணாச்சல் முதலமைச்சர் பேமா கண்டு ஆகியோரும் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.  தாய்லாந்து, பர்மிய கட்டிடக் கலையில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவில் வளாகத்தில் பவுத்த பண்பாட்டு ஆய்வு மையம், நூலகம் ஆகியன அமைந்துள்ளன. 

அதை தொடர்ந்து நம்சாய் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், பல திட்டங்களை துவக்கி வைத்தும் அமித்ஷா பேசியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளில் என்ன நடந்தது என காங்கிரஸ் தலைவர்கள் கேட்கின்றனர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு விழித்திருக்கிறார்கள். ராகுல், இத்தாலிய கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு, பிரதமர் மோடி, மாநில முதல்வர் பெமா கண்டு செய்துள்ள வளர்ச்சி பணிகளை பார்க்க வேண்டும். மாநிலத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பலப்படுத்தவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், 50 ஆண்டுகளில் செய்யாத பணியை கடந்த 8 ஆண்டுகளில் மோடியும், பெமா கண்டுவும் செய்துள்ளனர் என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து