முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்ச் ஓபன் போட்டி: முகுருசா அதிர்ச்சி தோல்வி

திங்கட்கிழமை, 23 மே 2022      விளையாட்டு
Mukurusa 2022-05-23

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் தொடங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்பின் முகுருசா, எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கையா கனேபியை எதிர்கொண்டார்.

முதல் சுற்றை முகுருசா 6-2 என எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட கனேபி இரண்டாவது சுற்றை 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் சிறப்பாக ஆடிய கனேபி 6-4 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் கனேபி 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டம்  வென்றது மான்செஸ்டர் சிட்டி

கடந்த 5 போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி அணி 4 முறை சாம்பியன் லீக் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். நடப்பு சீசனுக்கான ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தன.

இதில் மான்செஸ்டர் சிட்டி, ஆஸ்டன் வில்லா அணிகள் மோதின. தொடக்கம் முதல் ஆஸ்டன் அணி சிறப்பாக விளையாடியது. ஒரு கட்டத்தில் 2-0 என ஆஸ்டன் வில்லை முன்னிலை பெற்றிருந்தது. இறுதியில், மான்செஸ்டர் சிட்டி அணி அதிரடியாக ஆடியது. இதனால் கடைசி கட்டத்தில் 3 கோல்களை அடித்து அசத்தலாக வெற்றி பெற்றது. அத்துடன், சாம்பியன் லீக் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. மான்செஸ்டர் சிட்டி அணி 38 போட்டிகளில் 29 வெற்றி, 6 டிரா, 3 தோல்விகள் என மொத்தம் 93 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

டெஸ்ட் அணியில் இடம்பெற  உம்ரானுக்கு தகுதி - அசாருதீன் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளராக அசத்தியவர் உம்ரான் மாலிக். பிரமிக்க வைக்கும் வேகத்தில் பந்துவீசும் இவர் இந்த ஐபிஎல் சீசனில் அதிரடி பேட்டிங் ஜாம்பவான்களுக்கு பந்துவீச்சில் அச்சுறுத்தலாக விளங்கினார். தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவர் அதிகபட்சமாக இந்த தொடரில் 157 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்தார். இவரை இந்திய அணியில் தேர்வு செய்ய கூறி பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க 20 ஓவர் தொடருக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார். 

இந்த நிலையில் உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது, தவறினால் அவர் காயங்களுக்கு ஆளாக நேரிடும். ஒரு எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு தேவைப்படும் ஆதரவு அவருக்கு வழங்கப்படும் என நம்புவதாக" அவர் தெரிவித்துள்ளார்.

காலணி விருதை  வென்ற முதல் ஆசிய வீரர்

நடப்பு ப்ரீமியர் லீக் தொடரில் முகமது சாலா மற்றும் தென் கொரிய வீரர் Son Heung-min ஆகியோர் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்களாக தொடரை நிறைவு செய்துள்ளனர். அதனால் இருவரும் தங்கக் காலணி விருதை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் 29 வயதான Son Heung-min, Tottenham Hotspur கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் கடந்த 2015 முதல் அந்த அணியில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 231 போட்டிகளில் விளையாடி, 93 கோல்களை அவர் பதிவு செய்துள்ளார். 

இதில் நடப்பு ப்ரீமியர் லீக் தொடரில் மட்டுமே அவர் 23 கோல்களை பதிவு செய்துள்ளார். மறுபக்கம் எகிப்து வீரர் முகமது சாலாவும் நடப்பு சீசனில் 23 கோல்களை பதிவு செய்துள்ளார். அதனால் இருவருக்கும் தங்கக் காலணி விருது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் ப்ரீமியர் லீக் தொடரில் இந்த விருதை வெல்வது இதுவே முதல்முறை. தென் கொரிய அணிகக்க 98 போட்டிகளில் விளையாடி, 31 கோல்களை பதிவு செய்துள்ளார் Son Heung-min. இவர் தென் கொரிய அணியின் கேப்டனும் கூட. முன்கள வீரரான அவர் ஆசிய கண்டத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார்.

பிஃபா கால்பந்து உலகக் கோப்பை: களம் இறங்கும் மகளிர் நடுவர்கள்..!

வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா) கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பையை நடத்த உள்ளது. மொத்தம் 32 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. அணிகள் மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த தொடரில் முதல் முறையாக மகளிரை நடுவர்களாக நியமித்துள்ளது பிஃபா. இது உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த தொடரில் மூன்று மகளிர் நடுவார்களாகவும், மூன்று மகளிர் துணை நடுவர்களாகவும் பணியாற்ற உள்ளனர். பிரான்ஸ், ருவாண்டா மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் நடுவர்கள் மூவர் இந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை நடுவர்களாக பிரேசில், மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பிரெஞ்சு ஓபன் போட்டி:  2-வது சுற்றில் கார்லோஸ் 

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கியது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னணி வீரரான டோமினிக் திம் (ஆஸ்திரியா) அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். 

அதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் அதிர்ஷ்டசாலி ஜுவான் இக்னாசியோ லண்டெரோவை வீழ்த்தி பிரெஞ்சு ஓபனின் 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நாளை மறுதினம் நடைபெறும் 2-வது சுற்றில் இவர் சக நாட்டு வீரரான ராமோஸ் வினோலாஸ்-சை எதிர் கொள்கிறார்.

 

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!