முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 4- வது இடம் பிடித்தது இலங்கை

சனிக்கிழமை, 28 மே 2022      விளையாட்டு
Sri-Lanka 2021-12-28

Source: provided

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரை 

1-0 என கைப்பற்றியது. இந்நிலையில், வங்காளதேசம், இலங்கை டெஸ்ட் தொடருக்கு பிறகான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியானது. 

2-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி இலங்கை அணி 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 55 சதவீத வெற்றியுடன் இந்தப் பட்டியலில் இலங்கை 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் பட்டியலில் 75 சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், 71.43 சதவீதத்துடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்திலும் உள்ளது. 58.33 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது.

_____________

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றஇல் ரபேல் நடால் 

நடப்பாண்டிற்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.  இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் நெதர்லாந்தை சேர்ந்த 26-ம் நிலை வீரரான போடிக் வான் டி-யை எதிர்கொண்டார். 

இந்த போட்டியில் நடால் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  4-வது சுற்றில் நடால், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார். 

_____________

ராஜஸ்தான் வீரர் வான்டெரின் மனைவி அறிவிப்பால் ஆச்சர்யம்

தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், தென் ஆப்ரிக்கா வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லர் ஒவ்வொரு முறையும் பெரிய ஷாட்டை அடிக்கும்போதும் கேமராவில் வான்டெர் டுசெனின் மனைவி லாரா தவறுதலாக கட்டப்படுகிறார். இதனால் பலர் லாராவை பட்லரின் மனைவி என தவறுதலாக நினைத்துவிட்டர். இதுகுறித்து கிண்டலாக பேசிய லாரா ‘நான் பட்லரை 2வது கணவராக தத்தெடுத்துவிட்டேன்’ என தெரிவித்தார்.

இதுகுறித்து லாரா கூறியதாவது., நான் ஜோஸின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும் போது சில முறை கேமராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறேன். பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் அவரை பார்த்தது கூட இல்லை. என் கணவர் ரஸ்ஸி சில காரணங்களால் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதில் பட்லருக்கு உற்சாகத்தை தெரிவித்து வருகிறேன். இந்த சீசனில் நான் பட்லரை இரண்டாவது கணவராக தத்தெடுத்துவிட்டேன். இவ்வாறு கிண்டலாக கூறினார். 

_____________

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச்

பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 195-ம் நிலை வீரரான சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வதுசுற்றுக்கு முன்னேறினார்.

15-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் டியாகோஸ் வார்ட்ஸ்மேன் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் 18-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை தோற்கடித்து 4-வது சுற்றில் கால்பதித்தார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் 18-ம் நிலை வீராங்கனை யான அமெரிக்காவின் கோகோ காஃப் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் எஸ்டோனியாவின் 46-ம் நிலை வீராங்கனையான கையா கனேபியை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!