முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கொல்ல பயங்கரவாதிகள் சதி திட்டம்

புதன்கிழமை, 22 ஜூன் 2022      உலகம்
Imran-Khan 2022 02 08

Source: provided

பெஷாவர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கொல்ல பயகரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவு கூறியதாவது:- இம்ரான்கனை கொல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கொலை செய்யும் நபரின் உதவியை நாடியுள்ளனர்.

இம்ரான்கானுக்கு எதிரான எச்சரிக்கை வாசகம் பல்வேறு அமைப்புகளுடன் பகிரப்பட்டு வருகிறது. இதில் அவரை குறி வைக்கும் பொறுப்பு ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

இந்த தகவல் உருது நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருக்கிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இம்ரான் கானுக்கு பாதுகாப்புக்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பயங்கரவாத தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது என்றும், இந்த எச்சரிக்கை கடந்த 18-ந்தேதி விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் பயாஸ் சோகன் கூறும்போது, "இம்ரான்கனை கொல்ல சிலர் பயங்கரவாதியை நாடி உள்ளனர். இது கவலை அளிக்கும் விஷயம். அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்றார். 

கைபர் பக்துன்க்வா மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவர் டுவிட்டரில் கூறும்போது, "இம்ரான் கானை கொலை செய்ய ஆப்கானிஸ்தானில் உள்ள கொச்சி என்ற பயங்கரவாதிகள் சிலர் உத்தரவிட்டுள்ளனர் என்ற விவரம் என்னிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!