முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      உலகம்
France-Corona 2022 07 03

Source: provided

பாரீஸ் : வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த நாட்டு அரசு தரவுகளின்படி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,000 நோயாளிகள் கொரோனா தொற்றுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். 

2 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வரும் நிலையில் அங்கு தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது அந்த நாட்டு அரசை கவலையடைய செய்துள்ளது.

எனினும் சுற்றுலா பயணிகளிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, அரசு எதிர்ப்பு போராட்டங்களையும் தூண்டும் என்பதால் புதிய கட்டுப்பாடுகள் எதையும் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு கொண்டு வரவில்லை. அதே வேளையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக கவசங்களை பயன்படுத்தும்படி மக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து