முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு; தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022      அரசியல்
Rahul 2022 07 26

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேற்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தி ஈடுபட்டனர். 

இந்நிலையில், நாடாளுமன்றம் கூடியதுமே சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் வெளியேறிய காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அந்த பேரணியை விஜய் சவுக் பகுதியில் போலீசார், பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சாலையில் அமர்ந்து ராகுல்காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். 

தர்ணா போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கோரிக்கை விடுத்தபோதும் அந்த கோரிக்கையை ராகுல்காந்தி ஏற்க மறுத்தார். இதனையடுத்து, ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்று தர்ணா போராட்டத்தி ஈடுபட்ட ராகுல்காந்தியை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்த்து காங்கிரஸ் எம்.பி.க்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!