முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்களை விரட்டியடித்த தலிபான்கள்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      உலகம்
Afghanistan 2022-08-14

Source: provided

காபூல் ; காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலிபான்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. 

தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் உள்ளன.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் அங்கு அமலில் உள்ளன. உயர்கல்வி கற்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றி இன்றுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது. 

 

இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை கோரி கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை தலிபான்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பெண்கள் முன்னேறி செல்ல முயன்றதால் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலைந்து ஓடிய பெண்களை விரட்டி சென்று துப்பாக்கியால் தாக்கினர். மேலும் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தலிபான்கள் அடித்து விரட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து