எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருமங்கலம் : நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானம் பல்வேறு துறைகளில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செக்கானூரணி மற்றும் சாத்தங்குடி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு தேசியக் கொடிகளை வழங்கி சுதந்திர தின விழா வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை நேரில் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில்,
75-வது சுதந்திர தின விழா முடிந்து நூற்றாண்டு கொண்டாடும் போது உலகை தலைமை தாங்குற நிலையை உருவாக்குவோம். இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றால் மரியாதையோடு நம்மை பார்க்கிற நிலைமையை நாம் உருவாக்கியுள்ளோம். நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானத்தில் என்ன பல்வேறு துறைகளில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். அதற்கு உங்களுடைய பங்களிப்பு மகத்தான பங்களிப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வுகளில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் தமிழ்ச்செல்வம், பொருளாளர் வக்கீல்.திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவ சுப்ரமணியன், நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, சுமதி சாமிநாதன், ஜெயமணி,பேரவை பாண்டி, சிவஜோதி தர்மர், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |