முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே முடிவு : கிரீன் கார்டு கோரி விண்ணப்பம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      உலகம்
Gothapaya 2022-08-12

Source: provided

வாஷிங்டன் : கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளார். 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியதை தொடர்ந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபச்சே மனைவியுடன் முதலில் மாலத்தீவு தப்பி ஓடினார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். 

அதை தொடர்ந்து அவர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கியுள்ளார். அவரை பாதுகாப்பு காரணமாக அறைக்குள்ளேயே இருக்குமாறு தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அவர் விரைவில் தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்ப இருப்பதாக அவரது உறவினர் உதயங்க வீர துங்கா தெரிவித்தார். இதனால் வருகிற 24-ம் தேதி அவர் சொந்தநாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை மக்கள் இன்னும் அவர் மேல் கோபமாக தான் உள்ளனர். இதனால் மீண்டும் இலங்கை வந்தால் பாதுகாப்பு இருக்காது என அவர் நினைக்கிறார். 

இதையடுத்து அவர் தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளார். கடந்த மாதமே தனது வக்கீல் மூலம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற்றம் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான புதிய மசோதா விதிகளின் படி கிரீன்கார்டு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து