முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் குண்டு வீச்சு: பொள்ளாச்சியில் 3 பேர் கைது

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      தமிழகம்
Petrol-bomb 2022--09-23

பொள்ளாச்சியில் கார்களை எரித்த வழக்கில் நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பாஜக, இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடுகள் தொடர்புடைய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இதையடுத்து, இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரில் அமைந்துள்ள இந்து மத அமைப்பான இந்து முன்னணியின் நிர்வாகிகள் வீடுகளில் கடந்த 22-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், 2 ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. மேலும், இந்த வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி குமரன் நகரில் இந்து முண்ணனி அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

250 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, 500-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை ஆய்வு செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முகமது ரபிக் (26), ரமீஸ் ராஜா (36), மாலிக் என்கிற சாதிக் பாஷா (32) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து