முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கால்பந்து: கேமரூனை வீழ்த்திய ஸ்விட்சர்லாந்து

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      விளையாட்டு
24-Ram-54

Source: provided

கத்தார்: கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்து அணி, தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ள கேமரூனை 1-0 என வீழ்த்தியுள்ளது.

காலிறுதிக்கு... 

உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்கு மூன்று முறை (1934, 1938, 1954) தகுதி பெற்றும் அரையிறுதிக்கு முன்னேறியதில்லை ஸ்விட்சர்லாந்து அணி. தற்போது தொடர்ச்சியாக 5-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுகிறது. 1990-ல் காலிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்தது கேமரூன் அணி. உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு கேமரூன் தான். அதேபோல 8 முறை உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒரே அணியும் கேமரூன் தான். 

பிரீல் எம்போலோ... 

யூரோ 2020 போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய ஸ்விட்சர்லாந்து கேமரூனுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நன்றாக விளையாடியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 2-வது பாதி தொடங்கியவுடன் 48-வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்தின் பிரீல் எம்போலோ அபாரமான கோலை அடித்தார். இறுதியில் 1-0 என கேமரூனை வீழ்த்தியது ஸ்விட்சர்லாந்து அணி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து