முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய அதிபரின் சகோதரி தென்கொரியாவுக்கு மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      உலகம்
KIM 2022 11 25

வடகொரியா மீது ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகளை விதிக்க பரிசீலிப்பதாக தென்கொரியா அறிவித்த நிலையில் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கிற வகையில் ஒரு ஆவேச அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்பட பல ஏவுகணைகளை தொடர்ந்து ஏவி சோதித்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியா மீது ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகளை விதிக்க பரிசீலிப்பதாக தென்கொரியா அறிவித்தது. 

 இந்த அறிவிப்பை தொடர்ந்து, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கிற வகையில் ஒரு ஆவேச அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- 

அமெரிக்கா கொடுத்த எலும்பை கடித்து கொண்டு ஓடும் காட்டு நாயை விட மோசமான தென் கொரியா, வட கொரியா மீது என்ன தடைகளை விதிக்கப் போகிறது என்று ஆச்சரியப்படுகிறேன். எங்கள் மீதான அமெரிக்கா மற்றும் அதன் தென்கொரிய கூலிகளின் அவநம்பிக்கையான தடைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள், தென்கொரியா மீதான விரோதத்துக்கும், கோபத்துக்கும் எண்ணெய் ஊற்றுவது போலாகும். மேலும் அது அவர்களுக்கு ஒரு கயிறாக இருக்கும் என்று முட்டாள்தனமான முட்டாள்களை எச்சரிக்கிறோம் என்று அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து