முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை அமைச்சர் நாசர் திட்டவட்டம்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      தமிழகம்
Aavin 2022-12-01

Source: provided

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு கிடையாது என்று அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திட்டவட்டமாக கூறினார். 

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காமராஜ் நகர் அங்கன்வாடி பள்ளி அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் பேசியதாவது, 

உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியை ஒருங்கிணைத்து அடுத்த தலைமுறையை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் கொள்கை பிடிப்புடன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு நாம் முழு உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை. தினமும் 26 லட்சம் லிட்டர் பால்தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் 28 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. 

ஆவினில் பச்சை பால் பாக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது. மக்களுக்கு தேவையான அளவு பாக்கெட் பால் விநியோகம் செய்யப்படுகிறது. ஆரஞ்ச் நிற பாக்கெட் விற்பனை குறையவில்லை. மக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் பாக்கெட்டுக்கள் கிடைக்கிறது என்று  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து