முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தததாக புகார்: ஈரானில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      உலகம்
Iran 2022 12 04

Source: provided

டெக்ரான் ; இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக எழுந்த புகாரையடுத்து ஈரானில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோர் மீது ஈரானில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. உளவாளிகள் என்று கூறப்படும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. தனியார் மற்றும் பொது சொத்துக்களை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு பேருக்கு நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து