முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சியை கைப்பற்றப்போவது யார் ? குஜராத், மத்திய பிரதேசத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      அரசியல்
Gujarat election 2022-11-27

குஜராத், மத்திய பிரதேசத்தில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. குஜராத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்த நிலையில் இந்த 2 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைக்கு 2-வது மற்றும் இறுதி கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 58.68% வாக்குகள் பதிவாகி உள்ளன. குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (8-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த 2 மாநிலங்களிலும், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 63.14% வாக்குகள் பதிவானது. இதையடுத்து, 2-வது மற்றும் இறுதி கட்டமாக, 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.54 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் தனது சகோதரர் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி ஆகியோர் வாக்களித்தனர்.

இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இறுதியாக 2-ம் கட்ட தேர்தலில் 58.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் கடந்த முறை பாஜக, காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி நிலவியது. இந்த முறை பாஜக,காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

முன்னதாக, 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் நாளை (8-ம்தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்று மதியமே எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது தெரிந்துவிடும்.

இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தையகருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 92 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக எளிதாக அறுதிப் பெரும்பான்மையை பெறும். கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெறும். அக்கட்சிக்கு இது வரலாற்று வெற்றியாக அமையும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு ஆளும் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும். எனினும் காங்கிரஸைவிட அதிக இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து