எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் 18 வயது வாலிபர் ஒருவர் வெற்றி பெற்று வரலாறு படைத்து உள்ளார்.
அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் இருந்து கிழக்கே இயர்லே என்ற சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தலில், சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெய்லன் ஸ்மித் என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நகரின் சாலை மற்றும் துப்புரவு சூப்பிரெண்டாக உள்ள நெமி மேத்யூஸ் என்பவரை வீழ்த்தி ஸ்மித் வென்றுள்ளார்.
ஸ்மித்துக்கு 18 வயதே ஆகிறது. இதனால், அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு பின்னர் தனது பேஸ்புக்கில் ஸ்மித் வெளியிட்ட செய்தியில், இயர்லே நகரின் சிறந்த அத்தியாயம் கட்டமைக்கும் தருணம் இது. எனது தாயாரால் அழுகையை நிறுத்த முடியவில்லை. தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்த அவர், பொது பாதுகாப்பு, கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களை மீட்டெடுப்பது அல்லது நீக்குவது மற்றும் அவசரகாலத்திற்கு தயாராகும் புதிய திட்டங்களை அமல்படுத்துவது போன்ற விசயங்களை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |