முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான தடை நீக்கம் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2022      இந்தியா
modi-2022-09-01 (2)

Source: provided

ஷில்லாங் : வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான தடையை நீக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது., கால்பந்து போட்டியில் விதிகளுக்கு எதிராக செயல்படும் வீரர்கள், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதே போல் கடந்த 8 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த வளர்ச்சியின்மை, ஊழல், அமைதியின்மை போன்ற அனைத்து தடைகளுக்கும் எனது அரசு ரெட் கார்டு வழங்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும் முயற்சிகளையும் அகற்றியுள்ளோம்.

வடகிழக்கு மாநிலங்களில் மேம்படுத்தப்பட்ட விமான சேவை இணைப்பு, வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்ய உதவுகிறது, இது விவசாயிகளுக்கு பயனளிக்கிறது. அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டு வருவதுமே அரசின் இறுதி இலக்காகும். ஊழல், பாகுபாடு, வன்முறை மற்றும் வாக்கு வங்கி அரசியலை ஒழிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டு வளர்ச்சிக்கு மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதை போன்று உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை நாங்கள் நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அந்த விளையாட்டு போட்டியில் எங்கள் மூவர்ணக் கொடி உயரத்தில் பறக்கும், அப்போது எங்கள் சொந்த அணிக்காக நாங்கள் ஆதரவு குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து