முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் 'தீ' விபத்து

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      இந்தியா
West-Bengal 2023 01 24

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காள கவர்னர் மாளிகை, தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இந்த மாளிகையின் 2-வது தளத்தில் உள்ள அறை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ பிடித்தது. உடனே அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள், உடனடியாக தீயை அணைத்தனர். 5 நிமிடங்களுக்குள் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கவர்னர் மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து